டிஎம்சி என்றால் எவ்வளவு தண்ணீர் தெரியுமா? டிஎம்சி என்றால் என்ன?!
![Image](https://lh3.googleusercontent.com/-jZ0Q8hnBczw/X73-udUpPuI/AAAAAAAAyvE/1ekPS2cYIpErlnQQdwmtmX6xGFVO3a09QCLcBGAsYHQ/s1600/1606287014016000-0.png)
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி நீர் ஆகும். ஆயிரம் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதின் சுருக்க வடிவமே டிஎம்சி. 1 கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீருக்கு சமம். 1 டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர் ஆகும். 1 டிஎம்சி தண்ணீர் கிடைத்தாலே சென்னை மாநகர் முழுவதும் ஒரு மாதத்துக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணராஜ சாகர் (KRS) அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி ஆகும் . மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சி ஆகும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2 கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஒப்பானது நமது மேட்டூர் அணை ஆகும். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய அணையாக இருப்பது நமது மேட்டூர் அணை தான். மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தான் பணி நிறைவடைந்தது . 1934 ம் ஆண்டு இந்த அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்டது. தமிழகத்தின் சுமார் 12 -க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.